மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது : மம்தாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மேற்கொண்டிருந்த தொடர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது : மம்தாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
கொல்கத்தாவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி மருத்துவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து 11-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் மருத்துவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் குறை தீர்ப்பு மையங்கள் அமைக்கவும், பாதுகாப்புக்கு ஒரு போலீஸை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதற்கு மம்தா ஒப்புதல் அளித்ததை அடுத்து ஒருவாரமாக நடத்திவந்த வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்