மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
பதிவு : ஜூன் 14, 2019, 06:34 PM
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவையான நடவடிக்கைகளை வெற்றிகரமாக எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரில் உள்ள கங்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அன்னதானத்தை அமைச்சர் ஜெயக்குமார்  தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழக ரயில் நிலையங்களில் தமிழ் மொழிக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கை வந்தால், தமிழ் மொழியை காக்கின்ற வகையில் அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். சென்னையில் நாள்தோறும் 80 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் 9 ஆயிரம் லாரிகள் முலம் குடீநிர் விநியோகம்  செய்யப்பட்டு வருவதாகவும்,  நெமிலியில் 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டி பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், மக்கள் தண்ணீர் பஞ்சத்தை உணர்ந்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். மேலும், விளை நிலங்களில் அரசு அனுமதி பெறாமல் குடிநீர் எடுத்தால்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தி.மு.க. விளம்பரத்திற்காக தண்ணீர் விநியோகம் செய்வதாகவும், மக்களின் தாகத்தை தீர்க்க என்ன விலையையும் கொடுக்க அ.தி.மு.க. கட்சியும், தமிழக அரசும் தயாராக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத்தை கூட்டுவது குறித்து அறிவிப்பு உரிய நேரத்தில் வரும் என தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், தி.மு.க. பெற்ற வெற்றி தற்காலிகமானது தான் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

பிற செய்திகள்

பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்

ஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

18 views

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.

21 views

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

9 views

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ல் நிறைவு

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

10 views

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி ஆசிரியர் இட மாற்றம் : மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருத்தணி பாபு என்பவர், பணி இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ - மாணவிகள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

கோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.