போலீஸ் அனுமதியோடு ஆறுகளில் மறைமுக மணல் கொள்ளை - துரைமுருகன்
பதிவு : ஜூன் 14, 2019, 06:06 PM
குடிநீர் பஞ்சம் குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட அரசுக்கு, தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனை நேரில் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய துரைமுருகன், பாலாற்றில் அரசு மணல் குவாரிகள் எங்குமில்லை என ஆட்சியர் கூறுவதாகவும், ஆனால் போலீசின் மறைமுக அனுமதியோடு மணல் திருட்டு தொடர்ந்து நடைபெறுவதால் தான், மேலும்  தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் சென்னைக்கு இதுவரையில் குடிநீர் வழங்கி வருவதாகவும் துரைமுருகன் தெரிவித்தார். தண்ணீருகாக உள்நாட்டு யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி உள்ள நிலையில், குடிநீர் வழங்க ஒதுக்க வேண்டிய நிதியை,  குப்பை தொட்டி வாங்க ஆட்சியாளர்கள் செலவு செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.குடிநீர் பஞ்சத்தை போக்க தமிழக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

166 views

போலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

93 views

கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்

திண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4377 views

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

60 views

அரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்

சென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.

55 views

சேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

1382 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.