"குழந்தை தொழிலாளர்களை அகற்றுவதில் தமிழகம் முதன்மை மாநிலம்" - அமைச்சர் நிலோபர் கபில்
பதிவு : ஜூன் 12, 2019, 04:31 PM
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி சென்னை மெட்ரோ ரயிலில் நடைபெற்றது.
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி சென்னை மெட்ரோ ரயிலில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி தொடக்கி வைத்தனர்.  டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி, சென்னை விமான நிலைய ரயில் நிலையம் வரை சென்று, மீண்டும் சென்னை டி.எம்.எஸ்.ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிலோபர் கபில், இதுவரை 69 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 11 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.