ஆரணியில் தோல்விக்கு காரணம் ஏன்? - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசிமோகன்
பதிவு : ஜூன் 11, 2019, 06:36 PM
ஆரணி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
ஆரணி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக உறுப்பினர்களின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒருவர் கூட இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். 

பிற செய்திகள்

தெலங்கானா : டொனால்ட் டிரம்ப்புக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்தும் தெலங்கானாவை சேர்ந்த இளைஞரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

13 views

பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

91 views

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

7 views

உத்தரப்பிரதேசம் : இரண்டு வாகனங்கள் மோதி விபத்து - 8 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் லக்ரபான் கிராமத்தில், இரு வாகனங்கள் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.

7 views

இலங்கை : 60 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

12 views

திருவள்ளூர் : டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.