முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார் ராஜ் சத்யன்
பதிவு : ஜூன் 10, 2019, 02:33 AM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,  ராஜன் செல்லப்பா கூறினார். இந்நிலையில்அவரது இந்த கருத்துக்கு அவரது மகனும், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த  ராஜ்சத்யன், ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்திலும், கட்சியின் நிர்வாக முறைகள் மற்றும் தேர்தல் முடிவுகள் பற்றிய தங்கள் கருத்துக்களை பொதுவெளியில் கூறவேண்டாம் எனன்ற அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையையும் அத்துடன் இணைத்து வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு  சென்னையில் முதல்வரை  சந்திப்பதற்காக அவரது இல்லத்துக்கு ராஜ் சத்யன் சென்று, அவரிடம் பேசினார். 

பிற செய்திகள்

"கலைஞரும் இல்லை... ஜெ.அன்பழகனும் இல்லை" - காணொலியில் நா தழுதழுக்க பேசிய ஸ்டாலின்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் விட்ட தாளமுத்து, நடராஜன் தியாகத்தை போன்று ஜெ.அன்பழகனின் மறைவும் வரலாறாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாராம் சூட்டினார்.

1328 views

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் படத்திறப்பு விழா - திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் புகழஞ்சலி

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உருவ படத்தை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

129 views

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா - அமைச்சருக்கு கொரோனா இல்லை - பரிசோதனையில் உறுதி

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

177 views

சீன ஊடுருவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லடாக் மக்களின் கருத்தை கேளுங்கள் - ராகுல்காந்தி

சீன ஊடுருவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லடாக் மக்களின் கருத்தை, இந்தியா காதுகொடுத்து கேட்க வேண்டும் என ராகுல்காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

21 views

"கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்துதல் முகாமில் இருப்பவர்களுக்கு அம்மா அறக்கட்டளை மூலமாக மூன்று வேளை உணவு" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

கொரோனா நோயாளிகள் தனிமைப் படுத்துதல் முகாமில் இருப்பவர்களுக்கு, அம்மா அறக்கட்டளை டிரஸ்ட் மூலம், பழங்கள், காய் கறிகள் உடன், மூன்று வேளை அருசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

108 views

அறந்தாங்கி அருகே பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு திமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு திமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை, முன்னாள் அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் நேரில் வழங்கினர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.