நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு ரூ.50,000 வழங்கிய தமிழிசை
பதிவு : ஜூன் 08, 2019, 02:05 PM
நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவி ஜீவிதாவை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சந்தித்து முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவி ஜீவிதாவை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சந்தித்து முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். மாணவி ஜீவிதா நீட்டில் வெற்றிபெற்றதை அடுத்து, அவரது மருத்துவ படிப்பிற்கு உதவுவதாக தமிழிசை தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜீவிதாவை நேரில் சந்தித்த தமிழிசை வாழ்த்து தெரிவித்து, நிதியை வழங்கினார். இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், எல்லா தரப்பு மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை ஜீவிதா நிரூபித்துள்ளதாகவும், தான் மருத்துவராக பணியாற்றி கிடைத்த பணத்தின் சேமிப்பில் இருந்து தான் ஜீவிதாவுக்கு நிதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.  
ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.