"அமைச்சர் பதவி வேண்டாம்" - மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம்

மத்திய அமைச்சர் பதவி தனக்கு வழங்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.
x
மத்திய அமைச்சர் பதவி தனக்கு வழங்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார். கடந்த 18 மாதங்களாக உடல்நலக் குறைவால் பெரும் சவாலை தாம் சந்தித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசில் பங்கேற்று பணியாற்றியது கவுரவமாகவும் அனுபவமாகவும் அமைந்தது என அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். தனது உடல்நிலை மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையை கருத்தில்கொண்டு புதியதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டாம் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்