30ஆம் தேதி இரவு 7 மணிக்கு மோடி பிரதமராக பதவியேற்கிறார்

பிரதமர் மோடி 2வது முறையாக வருகிற 30ம் தேதி பிரதமர் பதவி பதவியேற்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
x
பாஜக சார்பாக வெற்றிபெற்ற புதிய எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி
கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி, தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.புதிய ஆட்சியை அமைக்க வருமாறு, பிரதமர் மோடிக்கு, குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக, வருகிற 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு, பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.. அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்க உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்