"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்
பதிவு : மே 26, 2019, 02:08 PM
மாற்றம் : மே 26, 2019, 02:20 PM
திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.
தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில்  ஒலிக்கும் என்று மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி  தயாநிதிமாறன் கூறினார்.  தனது வெற்றிக்காக பணியாற்றிய தோழமைக் கட்சி தலைவர்களுக்கு  நன்றி தெரிவித்து வரும் அவர்,  முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் கழக தலைவர் வீரமணி ஆகியோரை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழக மக்களின் குரலாக  திமுக எம்பிக்கள் குரல்  நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்றும், தமிழகத்துக்கான திட்டங்களை கொண்டுவருவோம் என்றும் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.