மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் - ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுடன் சந்திப்பு
பதிவு : மே 25, 2019, 05:53 PM
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர் பாலு உள்ளிட்டோர்  வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேச மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  வெங்கடேசன்,  நடராஜன் ஆகியோரும் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.