திமுக எம்.பி.க்கள் கூட்டம்: அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது

திமுக எம்.பி.க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
திமுக எம்.பி.க்கள் கூட்டம்: அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது
x
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடப்பதாகத் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் 37 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. இதில் திமுக போட்டியிட்ட 20 இடங்கள் உட்பட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  பச்சமுத்து, ரவிக்குமார் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரைச் சேர்ந்து மொத்தம் 23 பேர் திமுக எம்.பி.க்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்