நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஆறு தமிழ் எழுத்தாளர்கள்...அரசியல் களத்தில் தமிழ் அறிவுலகின் குரல்கள்
பதிவு : மே 24, 2019, 01:02 PM
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற, தமிழ் இலக்கியவாதிகள் ஆறு பேரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க உள்ளது.
தமிழ் இலக்கியத்தையும், அரசியலையும் பிரிக்க முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற எழுத்தாளர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் களமிறக்கப்பட்ட கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

இவர்கள் அனைவரும், தமிழ் அறிவுலகின் சாலச்சிறந்த ஆளுமைகள். வரலாறு, அரசியல், கருத்து, பண்பாடு, தமிழக உரிமை என கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்கள். பெண்ணியம், தலித்தியம், ஈழத் தமிழ், தமிழ் வரலாற்று ஆய்வுகள், தமிழ்மொழி, கலாச்சார அடையாளங்களை உலக அரங்கிற்கு முன்னெடுத்து செல்வதில் இந்த ஆறு எழுத்தாளர்களும் தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள். 

எம்.பி-யாக தேர்வாகியுள்ள இந்த இலக்கியவாதிகள், சமூகத்தை சுற்றி நடக்கும் அநீதிகள், வன்கொடுமைகள் ஆகியவற்றுக்கு எதிராக குரல் எழுப்பி வருவதுடன், தமிழ் சூழல், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள், திருநங்கைகள் வாழ்வுரிமை குறித்து தங்கள் எழுத்துகளில் காத்திரமாக பதிவு செய்து வருபவர்கள். சமூக அக்கறை கொண்ட இந்த இலக்கியவாதிகள் நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பி, சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகக் கூர்மையாக தொலைநோக்கு பார்வையுடன் தமிழ் சமூக பிரச்சினைகளை அணுகி, மாற்றத்தை விதைப்பார்கள் என்றே வாக்காளர்கள் இந்த இலக்கியவாதிகளை நம்பி இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

364 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

891 views

பிற செய்திகள்

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது - மதுசூதனன்

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னை

8 views

எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது" - அனிருத்

ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

5 views

நீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் ? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

சென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.

8400 views

துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

29 views

27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

167 views

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

220 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.