தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எதிரொலி : மம்தா பானர்ஜியை சந்தித்தார், சந்திரபாபு நாயுடு

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான,தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைக்கும் முயற்சியில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எதிரொலி : மம்தா பானர்ஜியை சந்தித்தார், சந்திரபாபு நாயுடு
x
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைக்கும் முயற்சியில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல்,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட்  தலைவர்கள் டி.ராஜா, லோக்தந்த்ரிக் ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்ற அவர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்