வானியல் தொழில்நுட்ப அடிப்படை கூட தெரியாதவர் மோடி - ராகுல்காந்தி

இமாச்சல பிரதேச மாநிலம், சோலானில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வானியல் தொழில்நுட்ப அடிப்படை கூட தெரியாதவர் மோடி -  ராகுல்காந்தி
x
இமாச்சல பிரதேச மாநிலம், சோலானில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய, ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார். கடனை திருப்பி செலுத்தாமல், விவசாயிகள் சிறை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும் ராகுல் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், மேகம் மறைத்ததால் ரேடாரில் தெரியாது என பிரதமர் மோடி கூறியதை விமர்சித்துள்ளார். வானியல் தொழில்நுட்ப அடிப்படை கூட தெரியாத ஒருவர் நமக்கு பிரதமராக வந்திருப்பதாகவும் ராகுல்காந்தி குறை கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்