கல்வெட்டில் எம்.பி ஆனார் ஓ.பி.எஸ் மகன்
பதிவு : மே 17, 2019, 01:10 PM
குச்சனூர் சனீஸ்வர பகவான், கோயிலில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் என்று பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின், மகன் ரவீந்திரநாத்குமாரின் பெயர், தேனி மக்களவை உறுப்பினர் என கல்வெட்டில் பொறிக்கபட்டுள்ளது. குச்சனூர் கோயில் நிர்வாகத்தினர் வைத்த இந்த கல்வெட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அ.ம.மு.க கொள்கைபரப்புசெயலாளர் தங்கதமிழ்செல்வன், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னே, ரவீந்திரநாத் எம்பியானது எந்தவிதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினார். நன்கொடைக்காக கல்வெட்டி பெயர் பொறித்திருந்தாலும், எம்.பி எனக் குறிப்பிட்டது தவறானது என்றும் உடனடியாக அதை அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய  "எம்.பி ரவீந்திரநாத்"கல்வெட்டு : தங்கதமிழ்செல்வன் விமர்சனம்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.