"ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
x
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்ளச் சொல்லி தேர்தல் ஆணையம் ஆணையம் உத்தவிட்டுள்ளது. இந்த நிலையில் ட்விட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், ஆளுங்கட்சியின் தேர்தல் விதிமீறல்களை ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக வழக்கமாக, தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளை உடைப்பதைப் போல, மேற்கு வங்கத்தில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலைகளை உடைத்துள்ளது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்