கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு
பதிவு : மே 16, 2019, 01:00 PM
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
மதுரையை வழக்கறிஞர் சரவணன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் நிஷா பானு, தண்டபாணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  பொது அமைதியை குலைக்கும்  வகையில் பேசி வருவதால் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்றும், இதனைஅவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என  வழக்கறிஞர் சரவணன் முறையிட்டார். ஏற்கனவே இது தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.  

பிற செய்திகள்

"உலக அளவில் தமிழை கொண்டு சேர்ப்பேன்" - செம்மொழி தமிழாய்வு முதல் இயக்குநர்

உலக அளவில் பல தொன்மையான மொழிபேசும் மக்களிடம் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துச்செல்வதே தன் முதல் பணி என செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

18 views

"விதிமீறலை கட்டுப்படுத்தவே அபராதம் வசூல்" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

அரசின் விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

15 views

தமிழகத்தில் தொழில் துவங்க 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

உலகளவில் முன்னணியில் உள்ள 11 மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு தமிழகத்தில் தொழில் துவங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

32 views

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் - 80% வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாக மருத்துவமனை தகவல்

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

305 views

தமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

55 views

சென்னையில் ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று

சென்னையில் ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.