இன்று மாலை 4 மணிமுதல் கமல் பிரசாரம்...
பதிவு : மே 15, 2019, 03:14 PM
சர்ச்சை காரணமாக கமல்ஹாசன் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் திருப்பரங்குன்றத்தில் இன்று திட்டமிட்டபடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
சர்ச்சை காரணமாக கமல்ஹாசன் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் திருப்பரங்குன்றத்தில் இன்று திட்டமிட்டபடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்து அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து கொடைக்கானலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தங்கியிருந்த தங்கும் விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அங்கிருந்து கார் மூலம் மதுரைக்கு கமல்ஹாசன் புறப்பட்டார். அவரது வாகனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மதுரை செல்லும் கமல்ஹாசன் அங்கிருந்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர், பெரியார் நகர், சமநாதம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் இன்று மாலை 4 மணிமுதல் கமல் பிரசாரம் மேற்கொள்வதாக மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடிதான் கமல்ஹாசனின் பிரசாரம் நடைபெற்று வருவதாக மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

338 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

793 views

பிற செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக புகார் - தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

51 views

அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் - ஸ்டாலின்

சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

18 views

காவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

20 views

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

12 views

பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

8 views

சாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.