"தேவைப்பட்டால் காங்கிரஸ் ஆதரவை பெறுவோம்" - தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி

தேவைப்பட்டால் காங்கிரஸ் ஆதரவுடன் 3வது அணி, மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால் காங்கிரஸ் ஆதரவை பெறுவோம் - தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி
x
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மூன்றாவது அணி ஆட்சி அமைப்பது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர், மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார். இதனிடையே, மே 23 ஆம் தேதிக்கு பின்னர் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில், காங்கிரஸ் முக்கிய காரணியாக இருக்காது என்றும், அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி 3வது அணிக்கு வந்து விடும் என்றும், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியின் செய்தி தொடர்பாளர் அபீத் ரசூல் தெரிவித்துள்ளார். அந்த சூழ்நிலையில், மூன்றாவது அணி தனித்து ஆட்சி அமைக்கும் என்றும், ஒரு வேளை எண்ணிக்கை குறையும் பட்சத்தில், காங்கிரஸ் தாமாக ஆதரவளிக்க முன்வந்தால் அதனை ஏற்றுக் கொள்வோம் என்றும் அவர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதேநேரத்தில், பா.ஜ.க. உடன் எவ்வித ஒட்டும் உறவும் கிடையாது என்றும், இது மதச்சார்பற்ற கூட்டணி மட்டும் தான் என்றும் ரசூல் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் சந்திப்புக்கு பின்னர் தெலங்கானா ராஷ்டிரிய ச​மீதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தேர்தல் முடிவுக்கு பின்னர், ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களின் நம்பிக்கையை பெற்று பிரதமராக வருவார் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்