வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி முகாம் இன்று நடைபெறும்
பதிவு : மே 15, 2019, 09:13 AM
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான முன்னேற்பாடு குறித்த பயிற்சி முகாம் சென்னையில், இன்று நடைபெறுகிறது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான முன்னேற்பாடு குறித்த பயிற்சி முகாம் சென்னையில், இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், இந்த முகாமில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் பங்கேற்று வாக்கு எண்ணிக்கைக்கான ஆலோசனைகள் வழங்குகின்றனர். இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கேரளா தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா, மற்றும் குஜராத், லட்சத்தீவுகள், புதுச்சேரி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர், அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தையும் பார்வையிட உள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.