மதுரையில் ரூ.100 கோடி செலவில் தமிழ் அன்னைக்கு சிலை - தமிழக அரசுக்கு வைகோ கேள்வி

மதுரையில் 100 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள தமிழ் அன்னை சிலை தொடர்பாக, தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிக்கை, தமிழர்களின் நெஞ்சில் கனலை மூட்டி இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்
மதுரையில் ரூ.100 கோடி செலவில் தமிழ் அன்னைக்கு சிலை - தமிழக அரசுக்கு வைகோ கேள்வி
x
மதுரையில் 100 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள தமிழ் அன்னை சிலை தொடர்பாக, தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிக்கை, தமிழர்களின் நெஞ்சில் கனலை மூட்டி இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழன்னை வடிவம் கற்சிலையில் கூடாது, பளிங்கு கல், பைபர், கண்ணாடி ஆகியவை கொண்டு, வேதகால பிராமணிய முறைப்படியும், இந்து கலாச்சார மரபையும் பின்பற்றி உருவாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மதுரையில் அமைய உள்ளது தமிழ் அன்னை சிலையா? அல்லது ஆரிய மாதா சிலையா? என தமிழக அரசுக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் கலை, பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் 'தமிழ் அன்னை' சிலையை தமிழக சிற்பிகளை கொண்டு கற்சிலையாக மதுரையில் நிறுவிட  அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்