என் ஜாதியை கேட்கும் எதிர்க்கட்சிகள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

எதிர்கட்சியினர் தன்னுடைய ஜாதி குறித்து கேட்பதில் ஆர்வம் செலுத்துவதாக கூறிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ஏழைகள் எல்லோரும் என்ன ஜாதியோ தானும் அந்த ஜாதி தான் என்று தெரிவித்தார்.
என் ஜாதியை கேட்கும் எதிர்க்கட்சிகள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
எதிர்கட்சியினர் தன்னுடைய ஜாதி குறித்து கேட்பதில் ஆர்வம் செலுத்துவதாக கூறிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ஏழைகள் எல்லோரும் என்ன ஜாதியோ தானும் அந்த ஜாதி தான் என்று தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் சோன்பாத்ராவில் நடைபெற்ற பிரசார பொதுகூட்டத்தில் பங்கேற்ற அவர், 21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஆபரேஷன் சக்தி என்ற பெயரில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதை குறிப்பிட்டார். அதற்காக பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்த அவர், அத்தகைய அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு அரசுக்கு தைரியம் வேண்டும் என்று கூறினார்.  வாஜ்பாய் அரசுக்கு அது இருந்ததாகவும், அவருக்கு முந்தைய ஆட்சியினருக்கு அது இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்