4 தொகுதி இடைத்தேர்தல் : அ.தி.மு.க., தி.மு.க.,அ.ம.மு.க.வேட்பாளர்கள் யார் யார் ?
பதிவு : ஏப்ரல் 23, 2019, 03:09 PM
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சூலூர் தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜின் சகோதரர் கந்தசாமி, அவரக்குறிச்சி தொகுதியில் வி.வி.செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் பெ.மோகன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க, அ.ம.மு.க-வை தொடர்ந்து, தற்போது அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.