"தயவு செய்து ஸ்டாலினுக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள் " - விஜயகாந்த்
பதிவு : ஏப்ரல் 16, 2019, 12:30 AM
சிகிச்சைக்கு பிறகு, முதன் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சிகிச்சைக்கு பிறகு, முதன் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். சென்னையில் வில்லிவாக்கம், கொளத்தூர், மூலக்கடை உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வேனில் வீதி வீதியாக சென்று கைகளை அசைத்தபடி தேர்தல்  பிரசாரத்தில் ஈடுபட்டார். மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால், வடசென்னை தொகுதி தேமுதிக​வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோருக்கு ஆதரவாக, மாம்பழம் மற்றும் முரசு சின்னத்திற்கு வாக்களிக்கும் படி விஜயகாந்த் கேட்டுக் கொண்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.