"ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்?" - அமைச்சர் தங்கமணி கேள்வி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட வெப்படை காமராஜ் நகர் இலந்தக் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து மின்துறை அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்.
x
பிரசாரத்தில் பேசிய அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடகாவில் ராகுல் காந்தி பேசியதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என கேள்வி எழுப்பினார்.  மேகதாது பிரச்சினையில் அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்ட தங்கமணி  நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பிக்கள் குரல் கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்