எம்.எல்.ஏக்கள் தங்கும் விடுதியில் திடீர் சோதனை
பதிவு : ஏப்ரல் 15, 2019, 04:52 AM
சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இந்த திடீர் சோதனை நடைபெற்றது. விடுதியின் சி பிளாக் பகுதியில் போலீசார் உதவியுடன் 2 மணி நேரமாக தீவிர சோதனை நடத்தப்பட்டது. பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இரவு நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் நடைபெற்ற இந்த சோதனை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.