பதுக்கி வைக்கப்பட்ட ரூ.75 லட்சம் பறிமுதல்
பதிவு : ஏப்ரல் 15, 2019, 12:06 AM
தூத்துக்குடி மாவட்டம் கருப்பூர் மற்றும் உருளைகுடி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவதற்காக தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 75 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம்  கருப்பூர் என்ற கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக அங்குள்ள தோட்டத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்று சோதனை நடத்திய அதிகாரிகள், சின்னராஜ் என்பவருக்குமான சொந்தமான தோட்டத்தில் மண்ணிற்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  68 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், உருளைக்குடி ஊராட்சிக்குட்பட்ட பீக்கிலிபட்டி கிராமம் அருகே கலைமணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 7 லட்சத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.