தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
பதிவு : ஏப்ரல் 15, 2019, 12:03 AM
மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு குறித்தும் தேர்தலுக்கான டிஜிபி அசுதோஷ் சுக்லா தலைமையில் மதுரையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தென்மண்டலத்தில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், மதுரை சித்திரை திருவிழா  பாதுகாப்பு குறித்தும் தேர்தலுக்கான டிஜிபி அசுதோஷ் சுக்லா தலைமையில் மதுரையில் ஆலோசனை நடத்தப்பட்டது. காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.  தென் மண்டலத்தில் உள்ள 10 மக்களவை மற்றும் 7 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பாதுகாப்பு குறித்து  கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.