"மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்" - ஸ்டாலின் உறுதி
பதிவு : ஏப்ரல் 14, 2019, 11:47 PM
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தி.மு.க. சார்பில் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தி.மு.க. சார்பில் ஸ்ரீபெரும்புதூர்  பேருந்து நிலையம் அருகே பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. தலைவர்  ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கார்ப்பரேட்களுக்கான அரசு என்று விமர்சித்தார் .  மத்திய அரசு   சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி இருந்தால்  தூத்துக்குடிக்கு கப்பல்கள் எளிதாக வந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார் ..   தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமையும் போது  சேது சமுத்திர திட்டம்  நிச்சயம் நிறைவேற்றப் படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.