"மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை" - ஸ்டாலின்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 10:56 AM
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பா.ம.க. தான் வழக்கு தொடர்ந்ததாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
கடலூர் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ரமேசை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதாவுக்கு சமாதி அமைப்பதை எதிர்த்து தி.மு.க. வழக்கு தொடர்ந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வருவது பொய் என்றார். சமாதி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. உடன் தான், தற்போது அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். இதேபோன்று கருணாநிதி சமாதிக்கு இடம் வழங்கியது தாங்கள் தான் என முதலமைச்சர் பழனிசாமி கூறி வருவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று தெரிவித்த ஸ்டாலின்,  மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு இடம் ஒதுக்கியது உயர்நீதிமன்றம் தான் என்றும் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அன்று மெரினாவில் இடம் வழங்காவிட்டால் கருணாநிதி உடலை, அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வந்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் இருந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகனாக மாற்றியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1544 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5922 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6690 views

பிற செய்திகள்

இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராணுவ வீரர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

106 views

அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு - பரபரப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாளான இன்று, அர்ச்சகர்கள் திடீரென புறக்கணிப்பு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

35 views

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

32 views

திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் தாமதம் : செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறியல்

செங்கல்பட்டு வழியாக திருமால்பூர், அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதாக கூறி பயணிகள் நேற்று இரவு செங்கல்பட்டில் ரயிலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

32 views

மண் சரிவு - புதைந்த 3 தொழிலாளர்கள்...

நீலாங்கரை அருகே கழிவு நீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

23 views

வேலூர் : கள்ள சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய பொருட்கள் அழிப்பு

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பூதமலையில் கள்ளச் சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்களை பொது மக்கள் அழித்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.