காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை...
பதிவு : ஏப்ரல் 12, 2019, 07:23 AM
திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, ஸ்டாலின் கலந்து கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் வரும் 18ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார்.  கிருஷ்ணகிரியில் காலையில்  பிரசாரத்தை தொடங்கும் ராகுல்காந்தி, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சேலம் செல்கிறார். அங்கு சீலநாயக்கன்பட்டி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி , திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர். அதன்பிறகு, தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய  இடங்களிலும்  ராகுல் பிரசாரம் செய்கிறார். ராகுல்காந்தி வருகையையொட்டி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

97 views

பிற செய்திகள்

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

30 views

மதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு

மதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.

201 views

ஸ்டாலினுடன் பாரிவேந்தர், ஈஸ்வரன் சந்திப்பு

தி.மு.க. கூட்டணியில் பங்கேற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்

65 views

3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.

42 views

தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் துவக்கம்

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமை துவங்குகிறது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.