ஸ்டாலின் பேச தடை விதிக்க மறுப்பு : அமைச்சர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கருத்து

உள்ளாட்சி அமைச்சர் வேலுமணியை விமர்சித்து பேச தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஸ்டாலின் பேச தடை விதிக்க மறுப்பு : அமைச்சர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கருத்து
x
தேர்தல் பிரசாரத்தில் தமக்கு எதிராக பேச தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்கக் கோரியும் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அமைச்சர் வேலுமணியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசிவருவதாக குற்றம்சாட்டினார். வாதத்தை கேட்ட நீதிபதி தேர்தல் பிரசாரத்தில் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவது வாடிக்கை தான் எனக் கூறிய ஸ்டாலினுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். ஏப்ரல் 16ஆம் தேதிக்குள் ஸ்டாலின் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்