"திமுக வீட்டு விளக்கு, அதிமுக வீட்டை கொளுத்தும் நெருப்பு" - ஸ்டாலின்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி , ஆர்.டி.சேகர் ஆகியோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆதரவு திரட்டினார்.
x
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி , ஆர்.டி.சேகர் ஆகியோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆதரவு திரட்டினார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர் , வாரிசுகளுக்கு திமுகவில் சீட் வழங்கப் பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை மறுத்தார். வேட்பாளர்களின் திறமையை பாருங்கள் எனவும், இரத்த பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அப்போது  விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப் படும் என்றும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்