வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா? - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை

வயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா? - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
x
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதாக செய்திகள் பரவிவரும் நிலையில், வயநாடு மாவட்ட, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.வழக்கமாக தேசிய தலைவர்கள் வடஇந்தியாவில்  போட்டியிட்ட நிலையில், ராகுல்காந்தி தங்கள் மாநிலங்களில் போட்டியிட வேண்டும் என தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.இந்நிலையில், வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதாகபரவிவரும் தகவலை காங்கிரஸ் தலைமை மறுக்காததால் வயநாடு காங்கிரசார் உற்சாகத்தில் உள்ளனர்.ராகுல்காந்தி போட்டியிடுவதாக இருந்தால், தான் வாபஸ் பெறுவதாக தற்போதைய வேட்பாளர் சித்திக்
தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தேர்தல் பணியை விரைவுப்படுத்துவதற்காக இன்று வயநாடு மாவட்ட காங்கிரஸ், மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் கல்பற்றாவில் நடைபெறவுள்ளதாக மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்