நட்சத்திர பேச்சாளர்கள் யார்?...யார்? - பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நட்சத்திர பேச்சாளர்கள் யார்?...யார்? - பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
x
அதிமுகவை சேர்ந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வைகைச் செல்வன் உள்ளிட்டோர் பெயர்கள் பட்டியலில் உள்ளது.

தி.மு.க. சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர அந்தஸ்தில் பிரசாரம் மேற்கொள்வார்கள்  
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் சீத்தாராம் ஹெச்சூரி, பிரகாஷ் கரத், பிருந்தா கரத், ஜி.ராமகிருஷ்ணன்உள்பட 40 பேரும்  தே.மு.தி.க.வில் அதன் தலைவர் விஜயகாந்த், மற்றும் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் உள்பட 40 பேரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருப்பூர் துரைசாமி, மல்லை சத்யா உள்பட 20 பேர் நட்சத்திர அந்தஸ்தில் பிரசாரம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்