பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும், வேட்பாளர்களின் முதல் பட்டியலை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லியில் வெளியிட்டார்.
பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும், வேட்பாளர்களின் முதல் பட்டியலை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லியில் வெளியிட்டார். 

பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காந்திநகரிலும், ராஜ்நாத் சிங் லக்னோவில் போட்டியிடுகின்றனர். மும்பை மத்திய தொகுதியில் பூனம் மகாஜனும், காஸியாபாத் தொகுதியில் வி.கே. சிங்கும் போட்டியிடுகின்றனர். உத்தர கன்னடாவில் அனந்த்குமார் ஹெக்டே, பெங்களூரு வடக்கு தொகுதியில் சதானந்த கவுடா, திருவனந்தபுரத்தில் குமணன் ராஜசேகரனும் போட்டியிடுகின்றனர். இதே போல், தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில்  பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்திரராஜனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் ஹெச்.ராஜாவும், ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரனும் போட்டியிடுவதாக, பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்