இன்று வெளியாகிறது தேர்தல் அறிக்கைகள் - காலை 10 மணிக்கு திமுக, 10.15 மணிக்கு அதிமுக

போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டுள்ளது.
இன்று வெளியாகிறது தேர்தல் அறிக்கைகள் - காலை 10 மணிக்கு திமுக, 10.15 மணிக்கு அதிமுக
x
போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு கட்சிகளும் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை பத்து மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக தேர்தல் அறிக்கை  காலை பத்தேகால் மணிக்கு வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருகட்சி தேர்தல் அறிக்கைகளிலும் கவர்ச்சி அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தேர்தல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்