அதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் : யார், யாருக்கு எந்த தொகுதி? - ஞாயிறன்று வெளியீடு

அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் தொடர்பான பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் : யார், யாருக்கு எந்த தொகுதி? - ஞாயிறன்று வெளியீடு
x
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா , புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என். ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.  யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்வதில் கால தாமதம் நிலவி வந்தது. தற்போதைய சூழலில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு பணி முடிவடைந்து விட்டதால், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க. மேலிடம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்