மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
பதிவு : மார்ச் 15, 2019, 02:37 PM
சென்னை எழும்பூரில், தமிழ் இலக்கமுறை நூலகம் அமைத்து, அதற்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பெயர் சூட்டப்படும் என பா.ம.க தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கான பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை தியாகராயநகரில் வெளியிட்டார்.
 
* அதில் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஆயிரம் வழங்கும் குறைந்தபட்ச அடிப்படை வருமான திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

* சிறு, குறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டுக்கு 6 ஆயிரம் மானியம் போதுமானதல்ல என்பதால், இதை ஏக்கருக்கு 10 ஆயிரமாக உயர்த்த பாடுபடுவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தமிழக அரசிடம் ஆயிரம் கோடி நிதியுதவி பெற்று, சென்னை எழும்பூரில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரக வளாகத்தில், தமிழ் இலக்கமுறை நூலகம் அமைத்து, அதற்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பெயர் சூட்டப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

* இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது பெற்று தர பாடுபடுவோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* பயிர் மற்றும் கல்விக்கடன் தள்ளுபடி, சுகாதாரம், தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்கள் நலன், மது-புகையிலை ஒழிப்பு உள்பட பல வாக்குறுதிகளை பா.ம.க அளித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

8 வழி சாலை திட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? - அன்புமணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

தருமபுரி மக்களிடம் அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

298 views

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை அமைச்சரவை பரிந்துரைப்படி ஆளுநர் விடுவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

100 views

"தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம்" - ராமதாஸ்

தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

300 views

பிற செய்திகள்

நாடக கலைஞர்களின் நலனே முக்கியம் : கார்த்தி

எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது தங்கள் எண்ணம் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

4 views

தமிழகத்திற்குள் நிபா வைரஸ் பரவாமல் இருக்க கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது தடுப்பு மருத்து தெளிப்பு

நிபா வைரஸ் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க திருப்பூர் உடுமலை அருகே கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் மீது கிருமி தடுப்பு மருத்து தெளிக்கப்பட்டன.

4 views

மதுரையில் தமிழன்னை சிலையை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

மதுரையில் தமிழன்னை சிலையை அமைக்கக் கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

7 views

வாலாஜா ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது : குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க வீராணம் ஏரியை தொடர்ந்து வாலாஜா ஏரியில் இருந்தும் நீர் கொண்டுவரப்படுகிறது.

6 views

திண்டிவனம்: நீதிபதி முன் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி

திண்டிவனம் ரோசன் காலனி பகுதியை சேர்ந்த சரண்ராஜ் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

7 views

45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் - தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.