பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் கண்டனத்திற்குரியது - ஸ்டாலின்
பதிவு : மார்ச் 11, 2019, 01:49 PM
பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் கூ​றியுள்ளார். சில நிமிடங்களே ஓடும் அந்தக் காட்சிகளில் மாணவிகள் அலறித் துடிப்பது பெரும் வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து சில வார இதழ்கள் வெட்டவெளிச்சமாக வெளியிட்டுள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின் போராட்டங்கள் நடத்தியும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். குலை நடுங்கும் வகையில் பெண்களை சீரழிக்கும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற அவர் யாரும் தப்பமுடியாது என்று கூறியுள்ளார். சென்னை முதல் பொள்ளாச்சி வரை பாலியல் வன்முறை நீண்டிருப்பதாக கூறியுள்ள ஸ்டாலின் குற்றவாளிகள் மீது நடவடிக்கை வலியுறுத்தி தி.மு.க சட்டரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்

நடிகை ஓவியா நடிக்கும் புதிய படம்

நடிகர் பாண்டியராஜனின் மகன் நடிக்கும் படத்தில், நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

5 views

சசிகலா சொன்னதால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் - தங்க தமிழ்செல்வன்

சசிகலா சொன்னதால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

99 views

77 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - காரில் வைத்து 20 பெட்டிகளில் தங்கம் கடத்தலா?

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான 77 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

5 views

கை பம்பில் தண்ணீர் அடித்து குடிக்கும் மாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்

எருமை மாடு ஒன்று சாலையோரம் உள்ள கை பம்பில் தனது கொம்பை பயன்படுத்தி தண்ணீர் அடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

129 views

"அ.தி.மு.க வெற்றியை குவிக்க முனைப்புடன் பணியாற்றுங்கள்" - அ.தி.மு.க மகளிர் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற மகளிர் அணியினர் பணியாற்ற, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறைகூவல் விடுத்துள்ளார்.

10 views

தி.மு.க., அ.ம.மு.க.வுக்கு வாக்களிப்பது வீண் செயல் - ராஜேந்திர பாலாஜி

தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வுக்கு வாக்களிப்பது வாக்குகளை வீண் அடிப்பதற்கு சமம் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.