ஆளுநரிடம் திமுக புகார் - ஆர்.எஸ்.பாரதி கடிதம்
பதிவு : மார்ச் 09, 2019, 12:41 PM
அதிமுக கட்சி பணிகளுக்காக அரசு தலைமை செயலகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆளுநரிடம் திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி எழுதியுள்ள கடிதத்தில் இப்புகாரை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின்படி,  தலைமை  செயலகத்தை, அரசு பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்பது விதிமுறை என்று அக்கடிதத்தில் ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டுள்ளார். 

* ஆனால் நேற்று அ.தி.மு.க. கட்சி பணிகளுக்காக,  அரசு தலைமை செயலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தியதாகவும், இதற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் துணை போயிருப்பதாகவும் ஆர்.எஸ். பாரதி 
குற்றம் சாட்டியுள்ளார்.  முன்னாள் எம்.பி .கே.சி.பழனிச்சாமியை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி , அரசின் தலைமை செயலகத்தில் நடைபெற்றதாக ஆர்.எஸ் பாரதி சுட்டிக்காட்டியுள்ளார்.

* அதிமுக தலைமை அலுவலகம் சென்னையிலேயே, அமைந்திருக்கும்போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி,அரசியல் பணிகளுக்காக, அரசு தலைமை செயலகத்தை பயன்படுத்தி உள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் இப்பிரச்சினையில் தலையிட்டு, முதலமைச்சர்,  துணை முதலமைச்சர்,  அரசு  தலைமை செயலாளரிடமிருந்து  உடனடியாக விளக்கம் கேட்டு,  சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அக்கடிதத்தில் ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

896 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4307 views

பிற செய்திகள்

ரிபப்ளிக் தொலைக்காட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரும்பாலன கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெரும் என தெரிவிக்கின்றன.

1051 views

மக்களவை தேர்தல் நிறைவு... 66.39 % வாக்குகள் பதிவு

நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நிறைவடைந்தது. 66 புள்ளி 39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

31 views

வாக்காளர்களுக்கு நன்றி - தலைமை தேர்தல் ஆணையர்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

27 views

மறுவாக்குப் பதிவின் போது லேசான தடியடி : அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க,வினர் இடையே வாக்குவாதம்

சென்னை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது தி.மு.க, அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.

34 views

திமுக, அதிமுக வெற்றி வாய்ப்பு தொகுதிகள்

நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.

5494 views

ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னோரு செருப்பும் வரும் - கமல்

பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா வேளச்சேரியில் நடைபெற்றது.

816 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.