அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகை : பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகை : பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
x
பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் சிவகங்கை, நாகை மாவட்டங்களுக்கான பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணத்தான் பகுதியில் நடைபெற உள்ளது. அமித்ஷா தலைமையில் நடைபெறும்இக்கூட்டத்தில் முரளிதர ராவ்,  தமிழிசை 
சௌந்தர ராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அமித்ஷா வரும் ஹெலிகாப்டர் தளத்தை சுற்றிலும் துப்பாக்கி 
ஏந்திய  போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்