அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி வேலுமணி பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 20, 2019, 06:27 PM
கோவையில், மண்டல அளவிலான அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவையில், மண்டல அளவிலான அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் ஆர்.பி. உதயக்குமார், எஸ்பி.வேலுமணி மற்றும் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் நிர்வாகிகள் மத்தியில் மேடையில் பேசினார். அப்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கட்சியினரை கேட்டுக் கொண்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.