அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்து
பதிவு : பிப்ரவரி 19, 2019, 06:58 PM
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் 21 தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாஜக ஆதரவு அளிக்கம் எனவும் அவர் கூறினார். அ.தி.மு.க. கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பாஜக மேலிட பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.