அ.தி.மு.க - பா.ம.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
பதிவு : பிப்ரவரி 19, 2019, 02:41 PM
மாற்றம் : பிப்ரவரி 19, 2019, 02:49 PM
அ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலையில்,  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ம.கவுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், அ.தி.மு.கவுக்கு பா.ம.க ஆதரவு என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.