வேகமெடுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை...
பதிவு : பிப்ரவரி 18, 2019, 11:46 PM
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.
பா.ஜ.க. அ.தி.மு.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் களைகட்டத் துவங்கியுள்ளது. பா.ம.க., தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் இணையுமா? அல்லது பா.ஜ.க. குடையின் கீழ் அணிவகுக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. பா.ம.க.வுடன் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

இதனால், பா.ம.க.வுடன் கைகோர்க்கப்போவது  திமுகவா? அதிமுகவா? என்பதும், திமுகவுடன் பாமக இணைந்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு  என்னவாக இருக்கும் என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, திமுகவுடன் பாமக வரவேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினரின் கருத்தாக உள்ளது.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.