பிரதமர் மோடிக்கு எதிராக அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் - வைகோ
பதிவு : பிப்ரவரி 17, 2019, 10:53 PM
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை பிரதமர் செயல்படுத்துவதால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் வைகோ கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதரவுடன்மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.