இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு : திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் பங்கேற்பு...

மதுரையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேச பக்தர்கள் என சொல்பவர்கள் நாட்டை துண்டாட நினைப்பதாகத் தெரிவித்தார்.
x
மதுரையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேச பக்தர்கள் என சொல்பவர்கள் நாட்டை துண்டாட நினைப்பதாகத் தெரிவித்தார். பிரதமரானபோது இந்திய அரசியலமைப்பு சட்டம் மட்டுமே  தனக்கு பிடிக்கும் என்று கூறிய மோடி, அதன் பிறகு அவர் அதனை மதித்ததே இல்லை எனவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 

"பிரதமர் வேட்பாளரை நிர்ணயிப்பது ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை தான்" 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் பேசிய திருமாவளவன், சனாதன கும்பல், சாதி, மதவாத கும்பலின் பிடியில் நாடு சிக்கி தவிப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவில் இஸ்லாமியர்களும்,  இந்துக்களும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என விரும்பியவர் காந்தி என்று குறிப்பிட்ட திருமாவளவன், பாஜக-வின் பிரதமர் வேட்பாளரை நிர்ணயிப்பது ஆர்.எஸ்.எஸ்-ம், இந்து மகா சபையும் தான் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்