ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 03:46 AM
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்பட12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  புதிய சுகாதாரத்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.பதிவுத்துறை ஐ.ஜி குமரகுருபரன், 
வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டு, பதிவுத்துறை செயலர் பாலசந்திரனுக்கு, ஐ.ஜி  பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக துறைக்கு மாற்றப்பட்டு, புதிய ஆணையராக பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதேபோல, கோவை, மதுரை, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தி, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக சிவராசுவும், கோவை மாவட்ட ஆட்சியராக ராஜாமணியும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக உமா மகேஷ்வரியும், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், 21 மாவட்ட வருவாய் அலுவலர்களையும் தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஓரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஐ.ஏ.எஸ். மற்றும் வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.